வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்த கீழக்கரை பெண்மணிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த “MASA” நிர்வாகிகள்..

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த நாதியாஹனிபா என்ற பெண்மணி கடந்த வாரம் கீழக்கரைக்கு பெருமை சேர்க்கும் விதமாக பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

இவரை பாராட்டும் வண்ணம் மாசா நிறுவனர் இப்திகார் ஹசன் அறிவுறுத்தல்படி தலைவர் அகமது முகைதீன் செயலாளர் சிராஜ் தீன் மற்றும் உறுப்பினர்கள் ஹமிது சித்திக், சிமுர், சேகு ஜலால்தீன், மீரா சாகிர், அகமது ஜுமல், அகமது சுகைல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்நிகழ்வின் போது வழக்கறிஞரின் தந்தை முகம்மது ஹனீஃபா உடனிருந்தார்.