Home செய்திகள் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது எனக்கு உடன்பாடில்லை!- தனது கட்சி கொடியை அறிமுகம் செய்து நடிகர் மன்சூரலிகான் பேச்சு..

நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது எனக்கு உடன்பாடில்லை!- தனது கட்சி கொடியை அறிமுகம் செய்து நடிகர் மன்சூரலிகான் பேச்சு..

by Askar

நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது எனக்கு உடன்பாடில்லை!- தனது கட்சி கொடியை அறிமுகம் செய்து நடிகர் மன்சூரலிகான் பேச்சு..

சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் மன்சூரலிகான் தலைமையில் முதல் முறையாக மாபெரும் அரசியல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேடையில் அமர்ந்திருந்த நடிகர் மன்சூரலிகான் திடிரென மேடையில் இருந்த குப்பைகளை தொடப்பதால் சுத்தம் செய்து விட்டு தன் உரையை ஆற்றினார்.

அதில் உங்களுக்காக கண்டிப்பாக உழைப்பேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டார் அதன் பிறகு செய்திகளிடம் பேசிய போது.

எங்களது கொள்கை தமிழர்களை பிரதமராக கொண்டு வர வேண்டும்.

தமிழ் நாட்டில் எல்லாம் அடகு வைக்கப்பட்டுள்ளது.தமிழ் நாட்டில் அதிகளவில் வேலை வாய்ப்புகள் கொண்டு வர வேண்டும்..தமிழக மக்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும்.

அவர்கள் திமுக எம்.பி கனிமொழி அவர்கள் மதுக்கடைகளை ஒழிப்பேன் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்கள் அதை அவர்கள் பரிசினை செய்ய வேண்டும்.

நடிகர் எல்லாம் கட்சி ஆரம்பித்து வருகின்றன என்ற கேள்விக்கு? நான் நடிகன் நல்ல நான் ஒரு கூலிக்காரன் எனவும் நடிப்பதற்கு வரும் முன்பே மக்களுக்காக நான் போராடி வருகின்றேன்..நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது எனக்கே உடன்பாடு இல்லை.. அதற்காக விஜய் கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கிட்னியை விற்று கடன் கொடுக்கக் கூடிய சூழ்நிலையும் சாப்பிடுவதற்காக கிட்னியை விற்கக்கூடிய நிலைமை தமிழகத்தில் உள்ளது அதை தடுத்து அவர்களுக்கு உதவி கரம் நீட்டுவேன்.

டெல்லியில் முறையாக பள்ளிக்கூடங்கள் கட்டமைப்பு இல்லை.. தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு அதிமுக மற்றும் திமுக கட்சியினர் மாளிகை போல் பள்ளிக் கூடங்கள் கட்டிக் கொடுத்து உள்ளனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மடிப் பிச்சை எடுத்தாவது தேர்தலில் கண்டிப்பாக நிற்பேன் என இவ்வாறு கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com