
கீழக்கரை அருகே இரண்டு சக்கர வாகனத்தில் லாரி மோதி அதில் பயணம் செய்த மூன்று நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இம்மூவரும் உத்திரகோசமங்கையை சார்ந்த விக்னேஷ், விஜய் மற்றும் தினேஷ்பாபு ஆகியோர் ஆவர். படுகாயம் அடைந்த மூவரையும் கீழக்கரை மிஷன் மற்றும் நாசா அறக்கட்டளை ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இப்பணிகளை நிஷா ஃபவுண்டேஷனை சார்ந்த அசாருதீன், நசுருதீன் மற்றும் ப்ரவீன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு காயம்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.