
கீழக்கரை – இராமநாதபுரம் சாலை அதிக பட்ச விபத்து நடக்கும் நெடுஞ்சாலையாகவே மாறி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அதிவேகமாக செல்வதும், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் தடுமாறுவதும் தான் காரணமாகிறது.
நேற்று (15-08-2017) இரவு கீழக்கரையில் பொறியாளராக வேலை செய்யும் பூமிநாதன் என்பவர் காஞ்சிரங்குடி அருகே வாகன விபத்தில் மரணம் அடைந்து விட்டார். இவர் குடும்பத்துடன் இராமநாதபுரத்தில் வசித்து வந்தார். மேலும் இவர் பல சமூக அமைப்புகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.