Home செய்திகள் பல்பரிமாண எழுத்தாளர் பொறியாளர் சுஜாதா நினைவு நாள் (பிப்ரவரி 27, 2008)

பல்பரிமாண எழுத்தாளர் பொறியாளர் சுஜாதா நினைவு நாள் (பிப்ரவரி 27, 2008)

by mohan

சுஜாதா (இயற்பெயர் எஸ். ரங்கராஜன்) மே 3, 1935ல் திருவல்லிக்கேணி, சென்னையில் பிறந்தார். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். இந்த கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார்.அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.இவருடைய, “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, ‘சுஜாதா’வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார். சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது. அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.

சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.நேரு நினைவு கல்லூரியில் கணினி ஆய்வகம் திறந்து வைத்தார். பின்னாலில் தனது கட்டுரைகளில் புத்தனாம்பட்டி கருப்பாயியும் கணினி பயிக்கிறாள் என்று எழுதினார்.இவர் தொடாத தலைப்பே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறையிலும் தனது எழுத்தைக் கொண்டு சேர்த்தவர் ‘எந்த மரபையும் உடைக்கின்ற போது ஒரு புதுமையான இலக்கியம் தோன்றும்’ என்ற வகையில் அதுவரை இருந்த எழுத்து நடைகளை மாற்றி தனக்கென்ற வகையில் வேகமான சுவாரசியமான நடைக்குள் தமிழ் மொழியைக்கொண்டு வந்தவர். இவரது எழுத்து வரிகளில் கலந்திருக்கும் நகைச்சுவை அலாதியானனது. நாசூக்கானது சொற்களின் அளவைக் குறைத்து கதையில் தன்னுடன் வாசகனையும் வரச்செய்து பெரும்பாலானவற்றை வாசகனே ஊகித்து உணரும் வகையிலான இரசாயனத்தை தனக்கும் வாசகனுக்குமிடையில் தனது மொழிநடை மூலம் ஏற்படுத்திக்கொண்டவர்.

சூழ்நிலைகளையும் சம்பவங்களையும் கூர்ந்து அவதானித்து அவற்றை மிகச்சில சொற்களில் சொல்லி முடிக்கின்ற சாகசக்காரர் தலைமுறை இடைவெளி இல்லாமல் இக்கால இளைஞர்களினதும் எண்ணஓட்டங்களையும் புரிந்து கொண்டு எழுத்திலும் இளமையைக் கொண்டு வந்தவர்.ஆரம்பகால இவரது சிறுகதை முயற்சிகள் இன்றும் பிரமிப்பூட்டுபவை. வேறுபட்ட கருக்கள், வேறுபட்ட அணுகுமுறைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை சிக்கலான மருத்துவ, விஞ்ஞான,தொழில்நுட்ப,கணணி விடயங்களையும் மிக எளிமையான எடுத்துக்காட்டுக்களோடு பாமரரும் விளங்கும் வகையில் தமிழில் தந்தவர். பிப்ரவரி 27, 2008 தனது 72வது அகவை சென்னையில் இவுலகை விட்டு பிரிந்தார்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!