Home செய்திகள் திருப்பரங்குன்றத்தில் கோஆப்டெக்ஸ் ஊழியரசங்க 56வது பேரவை சங்க கூட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றத்தில் கோஆப்டெக்ஸ் ஊழியரசங்க 56வது பேரவை சங்க கூட்டம் நடைபெற்றது.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருபரங்குன்றம் தனியார் மஹாலில் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க ஐம்பத்தி ஆறாவது பேரவை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்மாநில தொழிற்சங்க தலைவர் பாரதி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் விசுவநாதன் முன்னிலை வகித்தார். வரவேற்புரை மாநிலத் துணைச் செயலாளர் சந்திரசேகர் மற்றும் இணைச்செயலாளர் சந்தியா நன்றியுரை கூறினார்.கூட்டத்தில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் சம்பளத்தை 25% உயர்த்திதர வலியுருத்தல்கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்கைத்தறி ஆடைகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்குநூல் விலையால் தேங்கியுள்ள ஜவுளி களுக்கு 20% வயதிலிருந்து 40% சதவீதமாக தள்ளுபடி அளித்து வியாபாரத்தைப் பெருக்க உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதுகோ-ஆப்டெக்ஸ் தொழிலாளர் 56வது பேரவை மாநாட்டில் தலைவர் பாரதி கூறும்போதுதமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி தற்காலிக பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்1.7.22 முதல் அடிப்படை சம்பளத்தில் 25% சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்கோ-ஆப் நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்விற்பனை நிலையத்தில் விற்பனையாகும் ஜவுளிகளுக்கு கமிஷன் வழங்க வேண்டும்.நூல் விலை ஏற்றத்தினால் கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிகள் விலை உயர்ந்துவிற்பனை இல்லாமல் தேக்கம் அடைந்துள்ளது.இவற்றை விற்பனை செய்ய 20% சதத்திலிருந்து 40% சதம் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் பாரதி பேசினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!