Home செய்திகள் ஷவர்மா கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு.பழைய சிக்கன் கறிகள் பறிமுதல்.

ஷவர்மா கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு.பழைய சிக்கன் கறிகள் பறிமுதல்.

by mohan

மதுரை மாவட்ட ஆட்சியாளர் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள 52கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு- 10கிலோ பழைய சிக்கன் கறிகள் பறிமுதல் – 5கடைகளுக்கு நோட்டிஸ்சிக்கன் ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது, சமைத்த உணவுப்பொருட்களை ப்ரீட்ஜரில் வைக்க கூடாது, உணவுப்பொருட்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்தனர் இதைதொடர்ந்து மீண்டும் மாலை மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் உணவு மால்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ராஜ்குமார் மற்றும் சந்திரமோகன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர் உணவு பொருட்களில் அதிக அளவு ரசாயனம் கலக்கக்கூடாது எனவே தினசரி பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது எனவும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் உணவு தயாரிக்கும் மாஸ்டர்கள் நகங்கள் அதிக அளவு வளர்க்கக் கூடாது எனவும் உணவுப்பொருட்களை நியூஸ் பேப்பரில் மடித்து வைக்கக் கூடாது எனவும் இலை அல்லது பாக்குமட்டை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர் மேலும் பைபாஸ் சாலையில் உள்ள மதுரை ஃபுட் ஸ்ட்ரீட் ஒரு கடையில் தொடர்ந்து பயன்படுத்திய எண்ணையை பயன்படுத்தியதால் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது மீண்டும் இதுபோன்று செயல்பாட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர் அதிகாரிகள் சோதனை மேற் கொண்டு இருக்கிறார்கள் என தெரியவந்ததும் பல்வேறு சவர்மா கடைகள் மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!