Home செய்திகள் டிப்பர் லாரி, குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு.

டிப்பர் லாரி, குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு.

by mohan

ராமநாதபுரம் மாவட்ட டிப்பர் லாரி மற்றும் குவாரி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று, இரண்டு டிப்பர் லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறோம். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் தொழில் நலிவடைந்தது. இதனால், வாகன லோன், வரி, இன்சூரன்ஸ், தகுதி சான்று உள்ளிட்ட செலவுகளை செய்ய மிகவும் கஷ்டப்பட்டு, பைனான்ஸ் கம்பெனிகளில் மீண்டும், மீண்டும் கடன்பட்டு இவைகளை செய்து செய்து வருகிறோம் . ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுமான பணிகளுக்குதற்போதுதேவைப்படும் என் – சாண்ட், ஜல்லி , கிராவல் போன்ற பொருட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைப்பதில்லை . இப்பொருட்கள் அண்டை மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தான் கிடைக்கிறது. இப்பொருட்களுக்கு சுங்கத்துறை அனுமதி பெற்ற நடைச்சீட்டுடன் விலைக்கு வாங்கிஎங்கள் டிப்பர் லாரி மூலம்ராமநாதபுரம் மாவட்ட கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். இதனால் கட்டுமான தொழிலாளர்கள் ஆயிரத்ருக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1 அலுவலர். தனியார் சொகுசு வாகனங்களில் வெளியாட்களின் உதவியுடன் எங்கள் வாகனங்களை மறித்து டிரைவர்களின் செல்போன்களை பறித்து நான் நான்கு மாவட்ட அதிகாரி என மிரட்டல் விடுகிறார். டிப்பர் லாரிகளுக்கு மாதத்திற்கு தலா ரூ.1,500 வீதம் பரமக்குடியில் உள்ள தனியார் வாகன பயிற்சி பள்ளி உரிமையாளரிடம் கொடுக்க வேண்டும். அல்லது, ராமநாதபுரத்தில் நான் சொல்லும் நபர்களிடம் செலுத்த வேண்டும். இல்லை எனில் எங்கள் வண்டிகள் அதிக பாரம் ஏற்றி வந்ததாக ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிப்பேன் என மிரட்டுகிறார். இதற்கு அஞ்சிய வேறு வழியின்றி சிலர் அவர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வண்டிக்கு ரூ.3 ஆயிரம் உயர்த்தி தரும்படி எங்கள் வண்டி மீது அதிக பாரம் ஏற்றி வந்ததாக அபராதம் விதித்து எங்கள் தொழிலுக்கு மிகுந்த இடையூறு செய்து வருகிறார். மோட்டார் வாகன ஆய்வாளரின் கடும் நடவடிக்கைகளுக்கு அஞ்சி மாதம் தோறும் பணம் உயர்த்தி கொடுத்த 12 சக்கர , 16 சக்கர கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது கிடையாது. எங்களை போன்ற ஒன்று அல்லது இரண்டு டிப்பர் லாரி மூலம் தொழில் செய்யும் எங்கள் மீது அபராதம் விதித்து வாழ்வாதாரத்தை அழித்து வருகிறார். மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் லஞ்சம் கேட்கும் அலுவலர் ஜெ. பூர்ணலதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ராமநாதபுரம் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!