Home செய்திகள் 75-வது சுதந்திரத் திருநாள் விடுதலைப் போரில் தமிழகம் சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா.

75-வது சுதந்திரத் திருநாள் விடுதலைப் போரில் தமிழகம் சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா.

by mohan

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக,மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர், தலைமையில் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ”விடுதலைப் போரில் தமிழகம்” சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது.இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, “சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா” முன்னிட்டு,மதுரை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகசுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை  இன்றைய தலைமுறையினர் அறிந்து பயன்பெறும் வகையில் கலைநிகழ்ச்சிகள், மாணவ, மாணவிர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, காந்தி நினைவு அருங்காட்சியத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.இக்கண்காட்சியினை,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், ஆகியோர்மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர்தலைமையில் தொடங்கி வைத்தார்கள். இக்கண்காட்சியில், இந்திய தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் அரிய புகைப்படங்கள் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த விடுதலைப் பேராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றுத் தொகுப்பு குறித்த புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள்சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.7 நாட்கள் நடைபெற்ற இந்த புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழா காந்தி நினைவு அருங்காட்சியத்தில் இன்றைய தினம் (06.04.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர் “சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா”-வை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ,பரிசு மற்றும் சான்றிதழ்களையும் பல்வேறு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் விழிப்புணர்வு மினி மாராத்தான் போட்டியில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்இரா.சுவாமிநாதன், காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர்கே.ஆர்.நந்தா ராவ்உட்பட அரசு அலுவலர்கள் மாணவ மாணவிர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!