உசிலம்பட்டியில்உரிய விலை கிடைக்காததால் வீதியில் கரும்புத்தட்டைகளை வியாபாரிகள் கொட்டிச் சென்ற அவலம்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த பொங்கல் திருநாளில் அனைவர் வீட்டிலும் முக்கிய இடம் பிடிப்பது திக்திக்கும் கரும்புகள்.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில் நியாயவிலைக்கடையில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கப்பட்டதால் வெளிமார்க்கெட்டில் கரும்புக்கு விலையில்லாமல் கரும்பு விவசாயிகள் பரிதவித்து வந்தனர்.இந்நிலையில் இவ்வருட பொங்கல் பண்டிகையின் போது கரும்பு வியாபாரிகள் பொங்கலுக்கு ஒரு வாராம் முன் விவசாயிகளிடமிருந்து கரும்;பை கொள் முதல் செய்து லாரி மற்றும் மினி லாரிகளில் ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு ஊராகச் சென்று தங்கி வியாபாரத்தில் ஈடுபடுவர்.இந்த வருடம் ஒரு கட்டு (ரூ15 எண்ணிக்கை) ரூ200 முதல் ரூ250 விற்பனையானது.பொஙகல் வரை இந்த விலையில் விற்பனையான நிலையில் அதன் பின் கட்டு ரூ50க்கு கூட வாங்க ஆளில்லை எனக் கூறப்படுகிறது.இந்த விலையில் விற்பனையானால் வண்டி வாடகைக்கு கூட கட்டாது என்பதால் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள வண்டிப்டே;டை தெருவில கரும்பு வியாபாரிகள் வீதிகளில் கரும்புத்தட்டைகளை கொட்டி வைத்து விட்டுச் சென்ற அவலம் ஏற்ப்பட்டுள்ளது.திடீரென விதியில் கொட்டப்பட்ட கரும்புத்தட்டைகளை கண்ட பொதுமக்கள் அவற்றை ஆர்வமுடன் அள்ளிச் சென்றனர்.

உசிலைசிந்தனியா