எம்ஜிஆர் பிறந்த நாள் விழா் அதிமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

 தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை தோற்றுவித்தவரும், தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தை உருவாக்கினாருமான எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் எம்ஜிஆர் 105வது பிறந்தநாள் விழாவுக்கு அதிமுக நகரச் செயலாளர் பூமா ராஜா தலைமையில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன் முன்னிலையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியம்மாள், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துறை தன ராஜன், நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் லட்சுமணன், மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

உசிலை சிந்தனியா