இராஜபாளையம் நகராட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் 120க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ளும் விதமாக அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் .மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகேசன் நகர அவைத்தலைவர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் 27,28, 29 ஆகிய மூன்று நாள் வேட்பாளர்கள் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதுஏராளமான அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், இராஜபாளையம் பகுதியில் உள்ள 42 வார்டுகளுக்கும் 120க்கும் மேற்ப்பட்டோர் விருப்ப மனு அளித்தனர் .இந்த நிகழ்ச்சியில் R 56 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் வனராஜ் . முன்னாள் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் PBS செல்வசுப்பிரமணியராஜா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்