Home செய்திகள் சுரண்டை பேரூராட்சி பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் அதிரடி ஆய்வு..

சுரண்டை பேரூராட்சி பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் அதிரடி ஆய்வு..

by mohan

சுரண்டை பேரூராட்சி பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி அலுவலகம், மெயின் ரோடு, வாட்டர் டேங்க், கீழச்சுரண்டை மற்றும் 15-வது வார்டு பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் ஆய்வு மேற் மேற்கொண்டார். அப்போது பேரூராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வினியோகம், சுகாதாரம் பேணுதல் மற்றும் டெங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக செய்யவும் டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது நகர திமுக சார்பில் செயலாளர் ஜெயபாலன் சுரண்டை பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளில் சுகாதாரம் பேணப்பட வேண்டும் எனவும், செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி. ஜெயபால், சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவும் பெரிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து கூடுதல் குடிநீர் வழங்கவும் கோரிக்கை விடுத்தார். பின்னர் பொதுமக்கள் சார்பில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் கழிப்பறைகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து பஸ்டாண்ட் மற்றும் கழிப்பிடங்களை ஆய்வு செய்த அவர் கழிப்பிடங்களை சுத்தமாக வைத்திருக்கவும், விளக்குகள் அமைக்கவும் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு, இளநிலை பொறியாளர் கோபி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!