Home செய்திகள் பறக்கும் கேமரா மூலம் ரவுடி கைது;தென்காசி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு..

பறக்கும் கேமரா மூலம் ரவுடி கைது;தென்காசி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு..

by mohan

பொதுமக்களை ஆயுதத்துடன் அச்சுறுத்திய ரவுடியை டிரோன் மூலம் கைது செய்த தென்காசி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் தென்காசி நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது என்ற நபர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மேற்படி சாகுல் ஹமீது என்பவரை கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தென்காசி காவல்துறையினர் தேடி வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன் தென்காசி பச்ச நாயக்கன் பொத்தை பகுதியை தன் வசமாக்கி உள்ளதாகவும், அங்கு யாரும் வரக்கூடாது என பொதுமக்களை மிரட்டி வந்ததாகவும், அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அச்சத்தில் இருந்த நிலையில் அங்கு ஆடுமேய்க்க சென்ற பீர் முகம்மது என்ற நபரை ஆயுதங்களால் தாக்கியதாகவும், அதில் பீர்முகமது படுகாயம் அடைந்துள்ளதாகவும், மேற்படி வழக்கு சம்பந்தமாக தென்காசி காவல்துறையினர் சாகுல்ஹமீது என்பவரை தீவீரமாக தேடி வந்தனர். எனினும் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து பொத்தை குளம் பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கர் இடத்திற்குள் ஓடி மறைந்து இருந்ததாக தகவல்கள் தெரியவந்தது. மேலும் அப்பகுதிக்கு குளிக்க சென்ற பெண்களை மிரட்டி வருவதாக தகவல் வந்ததையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் IPS, தென்காசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் ஆகியோரின் அறிவுரைப்படி தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் மேற்படி சாகுல் ஹமீது என்பவரை உடனடியாக கைது செய்ய ஆலோசனை செய்து பறக்கும் கேமரா(டிரோன்) வசதியுடன் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்பிரிவு தலைமைக்காவலர்கள் முத்துராஜ், மாரியப்பன், குற்றப்பிரிவு காவலர்கள் அருள், கார்த்திக், அலெக்ஸாண்டர், பொன்ராஜ் மற்றும் சவுந்தரராஜ் ஆகியோர் உடனடியாக பச்ச நாயக்கன் பொத்தை அருகில் சென்று டிரோன் மூலம் பச்ச நாயக்கன் பொத்தையில் அரிவாளுடன் குளத்தின் நடுவே பதுங்கி இருந்த சாகுல்ஹமீதை சினிமா பாணியில் மிகுந்த சிரமத்துடன் கைது செய்தனர். தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து துணிச்சலாக கைது செய்த தென்காசி காவல்துறையினரின் இந்த துணிவு மிக்க செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். குற்றவாளியை திறம்பட கைது செய்த தென்காசி காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!