சாதி ஆதிக்க தேர்தல் படுகொலையே அரக்கோணம் சம்பவம்’ – நீதிக்கான சாட்சியம் அமைப்பு அறிக்கை.

அரக்கோணம் சோகனூர் பகுதியில் நடைபெற்ற இரட்டை படுகொலை சாதி ஆதிக்கம் மனோபாவத்தில் நிகழ்ந்த தேர்தல் படுகொலையாகும் என்று இப் படுகொலை குறித்து ஆய்வு மேற்கொண்ட நீதிக்கான சாட்சியம் என்ற அமைப்பின் செயல் இயக்குனர் பாண்டியன் பேட்டி.மதுரையில் உள்ள நீதிக்கான சாட்சியம் என்ற அமைப்பின் சார்பாக அரக்கோணம் இரட்டை படுகொலை தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அமைப்பின் செயல் இயக்குனர் பாண்டியன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், அரக்கோணம் சோகனூர் பகுதியில் நடைபெற்ற பட்டியல் சாதி இளைஞர்கள் படுகொலை தேர்தலில் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்ததற்கான வன்கொடுமை சம்பவம் ஆகும். இந்த கொலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு நேரடியாகவே உள்ளது. ஆனாலும் சிவகாமி ஐஏஎஸ் இது குறித்து முரண்பட்ட தகவலை கூறியிருப்பது ஆச்சரியத்திற்குரியது.பட்டியல் சாதியைச் சார்ந்த அர்ஜுன், சூர்யா படுகொலை திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சாதிய படுகொலை மட்டுமன்றி தேர்தல் முன்விரோதமும் ஆகும். இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டம் 2015 விதிகள் 12 இன் கீழ் சாதி மண் படுகொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் ஒரு கோடி நிவாரண உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் 2 ஏக்கர் விவசாய நிலம் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.மேலும் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சௌந்தரராஜன் மதன்குமார் வல்லரசு ஆகியோருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொலை வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் மிகவும் அலட்சியமாக விசாரணையை கையாண்டு வரும் மரக்கோணம் காவல் துறையிடமிருந்து இவ்வழக்கை மாற்றம் செய்து பாரபட்சமற்ற வகையில் புலன் விசாரணையை மேற்கொள்ள மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும்.தேசிய பட்டியல் சாதி ஆணையம் தாமாக முன்வந்து இரட்டைப் படுகொலை சம்பவத்தை விசாரணை செய்ய வேண்டும் அதேபோன்று சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கை தாமாக முன்வந்து முழுவதுமாக கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தலையொட்டி பட்டியல் சாதி மக்கள் மீது அதிகரித்து வரும் சாதி வன்கொடுமைத் தாக்குதல்கள் படுகொலைகள் குறித்து சம்பவங்களை தேசிய பட்டியல் சாதி ஆணையம் ஒரு முழுமையான ஆய்வு செய்வதோடு பட்டியல் சாதி மக்கள் பாதுகாப்பாக தேர்தலை எதிர்கொள்ள தேர்தலுக்கு முன்பும் பின்பும் தமிழக காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image