உரம் , யூரியா திடீர் விலை உயர்வு – செங்கம் விவசாயிகள் பெரும் வேதனை !

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவு விவசாயம் சார்ந்த பகுதிகளாக உள்ளது. இங்கு பல லட்சம் ஏக்கர் நிலங்களில்நெல் வேர்க்கடலை மற்றும் முல்லை மல்லி பூ போன்ற பயிர்களை விவசாயம் செய்து அதன் கிடைக்கும் வருவாயைக் கொண்டு விவசாயிகள் தங்களுடைய குடும்ப வாழ்வாதாரங்களை மேம்படுத்துகின்றன.தற்போது நெல் நடவு நட்டு அறுவடை செய்து இரண்டாவது முறையாக வேர்கடலை பயிர் இடுவது வழக்கம். அப்போது வேர்க்கடலை பயிர் பயிரிடுவதற்கு முன்பு கலப்பு உரம் மற்றும் போட்டாஸ் போடுவது வழக்கம். அதேபோல் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் முல்லை பூ சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பு உரம் இடுவது வழக்கம். இன்னும் பல ஆயிரம் ஏக்கர் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள முல்லைத் பூச்செடிக்கு உரம் போட வில்லை .காரணம் விலை ஏற்றம்.முன்பு ஒரு மூட்டை உரத்தின் விலை 900இருந்து 950 ஆக இருந்தது தற்போது மத்திய மாநில அரசுகளின் விலை உயர்வு ஏற்றத்தால் தனியார் உர கடைகளில் ரூபாய்1300 முதல்1350 ஆக விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.கடந்த ஓராண்டாக தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வாட்டிவதைக்கும் கொரோனாவால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையக் கூடிய பொருட்களை விற்பனை செய்யாமல் பெருமளவில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது தொடரும் இந்த கொரோனா காலகட்டத்தில் விவசாயிகள் தங்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்கு கேள்விக்குறியாக இருக்கின்ற இந்த தருவாயில் இந்த உரம் யூரியா விலை ஏற்றத்தால் விவசாயிகள் பெருமளவு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வழக்கம்போல் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கக்கூடிய உரம் மற்றும் யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அதேநேரத்தில் தற்போது உரம் மற்றும் யூரியா விலையை இயற்றியுள்ள மத்திய மாநில அரசுகள் உடனடியாக விவசாயிகளின் மன நிலையை புரிந்து இந்த விலையை குறைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலோங்க செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image