மதுரை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு:

திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர்கள் 4 பவுன் செயினை வழிப்பறி செய்தனர் .இதுகுறித்து ,,திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை மாவட்டம் திருநகர் அருகேயுள்ள சுந்தர் நகர் பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் மல்லிகா (வயது 62).மல்லிகா நேற்று வெற்றி விநாயகர் கோவில் தெரு பகுதியில் மதியம் 01.00 மணிக்கு ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பைக்கில் வந்து 4 பவுன் செயினை பறித்து சென்றனர் .இச்சம்பவம் குறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில், திருநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்து வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image