இராமநாதபுரம் எக்குடியில் பெண்கள் மதரஸா திறப்பு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் எக்குடியில் 22-12-2017 (வெள்ளிக்கிழமை) மாலை 04.00 மணிக்கு பிறகு எக்குடி ஜும்ஆ பள்ளி வளாகத்தில் அன்னை ஆயிஷா(ரலி) பெண்கள் மதரஸா திறக்கப்பட உள்ளது.  இத்திறப்பு விழாவில் தமிழகத்ததைச் சார்ந்த பல சிறந்த மார்க்க அறிஞர்களும், பெரியோர்களும் மார்க்க உரை ஆற்றவுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இவ்விழாவுக்கு எக்குடி ஜமாத் தலைவர் அப்துல் காதர் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியின் சிறப்புரையை தேவிபட்டினம் தாருல் உலூம் ஹக்கானியா தலைவர் முஹம்மது காசிம் மற்றும் நிஸ்வான் துறை மேலாளர் முஹம்மது ஹக்கீம் ஆகியோர் வழங்க உள்ளார். இந்நிகழ்வின் பேருரையை MR பட்டினம் அல் அஸ்காரியா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது ஜலாலுதீன் வழங்க உள்ளார்.  இந்த மதரஸாவின் செயல்விளக்க உரையை நிஸ்வான் துறை ஆய்வாளர் ஹஜ்ஜி முஹம்மது வழங்க உள்ளார்.  மேலும் இந்நிகழ்வு எக்குடி ஜமாஅத் செயலாளர் அஸ்கர் அலி நன்றியுரையுடன் நிறைவு பெறும்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு எக்குடி ஜமாஅத் நிர்வாகத்தினர் பலர் முன்னிலை வகித்து வாழ்த்துரையும் வழங்க உள்ளனர்.  இந்த நிகழ்வுக்கு பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு எக்குடி ஜமாஅத்தினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.