இயற்கை பேரிடர்களை கையாளும் மற்றும் மீட்பு முறை பற்றிய பயிற்சி …

இராமநாதபுரம் மாவட்டத்தில், மழை வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலங்களில் பொதுமக்களையும், அவர்களது உடமைகளையும் பாதுகாப்பது மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்பாக, பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்புகள், 21.08.2017-ம் தேதி முதல் 23.08.2017-ம் தேதி வரை 3 நாட்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது..

சென்னை காவல்துறை கமாண்டோ பயிற்சி பள்ளி ஆய்வாளர் Vமனோகரன், உதவி ஆய்வாளர் R.கதிரேசன், காவலர் R.கார்த்திக், காவலர் B.சுப்புராஜ், காவலர் கணேசபாண்டியன், காவலர் P.மகேஷ் ஆகியோர் அடங்கிய பயிற்சியாளர்களால், இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் ஒரு காவல் ஆய்வாளர், 3 சார்பு ஆய்வாளர்கள் உட்பட 74 காவல் ஆளினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பின்போது, காவல் ஆளினர்களுக்கு மழை காலங்களில் வெள்ளதில் சிக்கிக் கொண்ட பொதுமக்களையும், அவர்களது உடைமைகளையும் படகுகளில் சென்று மீட்பது, முதலுதவி செய்வது, தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றுபபடுகைகளில் குடியிருக்கும் பொதுமக்களை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது மற்றும் சீரமைப்பு போன்ற முன்னெச்சரிக்கை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

நேற்று 23.08.2017–ம் தேதி, உச்சிபுளி அரியமான் கடற்கரை பகுதியில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நேரடி பார்வையில் நடைபெற்ற படகு பயிற்சி, மற்றும் முதலுதவி பயிற்சிகளில், இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் கடல் சீற்றங்களில் கையாள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்தும், செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image