நம்மை நாமே உயர்த்திக் கொள்ள அழகிய பயிற்சி முகாம்…

ஒரு சமுதாயம் முன்னேற்றம் அடைய தனி மனித ஒழுக்கம் என்பது இன்றியமையாத ஒரு விசயமாகும். அவசர உலகில் இருக்கும் நாம் சில கால இடைவெளியில் நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்துக் கொள்வது மிக அவசியமாகும்.

நம் பண்புகளை சீர்படுத்தும் விதமாக கீழக்கரை வடக்குத் தெரு சகோதரர்கள் அனைவரும் இணைந்து நற்பண்புகள் என்ற தலைப்பில் நாளை (21-05-2017), ஞாயிறு அன்று இஷா தொழுகைக்குப் பிறகு சி.எஸ்.ஐ பள்ளி பின்புறம் உள்ள லண்டன் காலனியில் ஒழுக்கப் பயிற்சி (தர்பியா) முகாம் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு ஒழுக்க பயிற்சியாளர்களாக இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் அபூபக்கர் மன்பஈ மற்றும் இளைஞர்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் ஆசிஃப் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.