பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக 4கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு..

கடந்த வியாழன் (13-04-2017) அன்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக இந்திய சட்ட கமிசனிடம் 4 கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு சமர்பிக்கப்பட்டது. இந்த மனு முஸ்லிம் சட்ட வாரியத்தின் செயலாளர். மெளலானா முஹம்மது வாலி ரஹ்மத் சாஹிப் அவர்களின் தலைமையில் இந்திய சட்ட வாரியத்தின் தலைவர் நீதிபதி பல்பர் சிங் செளதான் அவர்களை சந்தித்து கையெழுத்து பிரதிகளுடன் கூடிய மனு வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கப்பட்ட மனுவில் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதின் நோக்கம் மற்றும் இந்திய முஸ்லிம் அனைவரும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தையே விரும்புகிறார்கள் என்பதை வலியுறுத்தப்பட்டிருந்தது. அனைத்து கையெழுத்துகளும் மின் பிரதிகளாக ( Scanned copies) மாற்றி குறுந்தகடில் பதிவேற்றம் செய்யப்பட்டு மனுவுடன் வழங்கப்பட்டது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் மொத்தம் 4,83,47,596 பேர் கையெழுத்திட்டிருந்தனர், இதில் ஆண்கள் 2,73,56,934 பேரும், பெண்கள் 2,09,90,662 கையொப்பம் போட்டிருந்தார்கள் எனபது குறிப்பிடதக்கது.