கீழக்கரை அணியின் தொடரும் வாலிபால் வெற்றி..

இன்று கட்டுமாவடியில் திப்புசுல்தான் அணியினரால் முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் பல்வேறு அணியினர் கலந்து கொண்டனர்.  இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் கீழக்கரையைச் சார்ந்த MVC ( Moore Volleyball Club) அணியினர் முதல் பரிசை வென்றனர்.

கீழக்கரையில் இருந்து வெளியூரிக்கு சென்று கீழக்கரை அணியினர் வெற்றி பெறுவது கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது வெற்றியாகும்.

கீழக்கரையைச் சார்ந்த அணியினர் மென்மேலும் வெற்றிகள் பல பெற கீழைநியூஸ் நிர்வாகக்குழு வாழ்த்துகிறது.