ஆயிரக்கணக்கில் கருவேல மரங்களை அகற்றி சாதனை படைக்கும் தாசீம் பீவி கல்லூரி மாணவிகள், தொடரும் கருவேல வேட்டை..

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் மாணவிகள் இன்று (04.02.2017) காலை 11 மணியளவில் கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள கருவேல மரக்கன்றுகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

கல்லூரியின் இரண்டு சுழற்ச்சியை சேர்ந்த சுமார் 1500 மாணவிகள், பேராசிரியைகள்,  அலுவலகப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் இச்செயலில் ஈடுபட்டு பொதுப்பணித் துறையினரோடு சேர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பல ஆயிரக்கணக்கான விஷ கருவேல மரங்களை வேரோடு அகற்றினர். இப்பணியின் ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தினர் செய்திருந்தனர்.

தாசீம் பீவி கல்லூரி நிர்வாகம் தங்களுடைய கல்லூரி மாணவிகளை மட்டுமின்றி இப்பணியில் ஈடுபடும் அனைவரையும் ஊக்குவிது வருவது குறிப்பிடதக்கது.

இக்கல்லூரி மாணவிகளின் சமூகப் பணி சிறந்து விளங்க கீழை நியூஸ் நிர்வாக குழு வாழ்த்துக்களை மனமார தெரிவித்துக் கொள்கிறது.