ஜாதி சான்றிதல் வழங்க கோரி காட்டு நாயக்கர் சமூகத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திடீர் நகரை சேர்ந்த காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி செல்வி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்அதனைதொடர்ந்து செல்வி கூறியதாவதுதிடீர்நகர் அருகில் உள்ள ஹீரா நகரில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த காட்டு நாயக்கர் சமூகத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் சமூகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பட்டபடிப்பு முடித்து வேலை தேடி வருகின்றனர் பல மாணவர்கள் பள்ளி படிப்பு படித்து வருகின்றனர்வேலை தேடும் இளைஞர்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லாததால் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. பள்ளியில் படிக்கும் பல மாணவர்கள் 10, பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். பள்ளியில் ஜாதி சான்றிதழ் கொடுக்காததால் தேர்வு எழுத அனுமதிக்கமுடியாது என ஆசிரியர்கள் மாணவர்களை வெளியேற்றி வருகின்றனர். இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதியில் தடைபடும் நிலை உள்ளது. எனவே தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார்.அதனை தொடர்ந்து பேசிய அதே பகுதியை சேர்ந்த சுதா மீனாட்சி கூறியதாவதுகாட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த நான் இன்ஜினியரிங் பட்ட படிப்பை முடித்துள்ளேன். கல்லூரியில் படிக்கும்போதே ஜாதி சான்று அவசியம் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். எங்கள் குடும்பத்தினர் சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பித்த மனுவை கல்லூரி நிர்வாகத்தில் அளித்ததன் பேரில் தொடர்ந்து கல்லூரி படிப்பை முடித்தேன். ஜாதி சான்று இல்லாததால் எனக்கு கிடைக்க வேண்டிய ஸ்காலர்சிப் கிடைக்கவில்லை. தற்போது எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்ய முயற்சிக்கின்றனர் எங்கள் சமூகத்தினர் சமூகத்தினர் ஜாதி சான்று இல்லை என்பதால் என்னை திருமணம் செய்ய மறுக்கின்றனர். அதனால் 34 வயதாகியும் எனக்கு திருமணமாகவில்லை. வேலைக்கும் செல்லவும் முடியவில்லை என் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்