தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த நாடோடிகள், பழங்குடி கூட்டமைப்பினர்.

தங்களது குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு, தமிழக நாடோடிகள் பழங்குடி கூட்டமைப்பினர் நன்றி .நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தின் மூலம் நாடோடிகள் இன்னல்கள் குறித்து படமாக வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த படத்தை பார்த்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், உடனடியாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நாடோடிகளை தேடிச் சென்று அரசு உயர் அதிகாரிகள் அவர்களது குறைகளை அறிந்து நிவர்த்தி செய்ய ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில், அதிகாரிகள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து வருவதாகவும், ஜெய்பீம் படம் மூலம் தங்களது இன்னல்களை சுட்டிக்காட்டிய நடிகர் சூர்யாவிற்கும், படத்தை பார்த்து உடனடியாக தங்களது குறைகளை களைய நடவடிக்கை எடுத்த தமிழக மு.க. ஸ்டாலின், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து பதாதைகளை ஏந்தி தமிழக நாடோடிகள் பழங்குடி அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்