அப்துல் கலாம் 90வது பிறந்தநாள் விழா

அப்துல் கலாம்  90வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக  இராஜசிங்கமங்கலத்தில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.இந்நிகழ்வில் மக்கள் பாதை இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா , மக்கள் பாதை நூருல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.மக்கள் பாதை நூருல் அமீன் கூறுகையில், அப்துல் கலாம்  பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் மக்கள் பாதை சார்பாக கடந்த ஐந்தாண்டுகளில் தொடர்ச்சியாக பல்வேறு சமூக மாற்றத்திற்கான நிகழ்வுகளை முன்னெடுத்திருக்கிறோம்.மேலும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்தி இருக்கிறோம் என்றார்