Home செய்திகள் இராஜபாளையத்தில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா .

இராஜபாளையத்தில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா .

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைப்பு குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் இராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் மற்றும் இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய இராஜபாளையம் வட்டாட்சியர் இராமச்சந்திரன் பேசும்பொழுது வளைகாப்பு நிகழ்ச்சி கையில் அணியும் வளையல்கள் சத்தத்தால் குழந்தைகள் அறிவுடன் ஆற்றலுடன் பிறப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாம் தமிழர்கள் கண்டுபிடித்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர் என சிறப்புரையாற்றினார்.இதைத் தொடர்ந்து பேசிய இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் வளைகாப்பு நிகழ்ச்சியில் தாய்மாமன் மற்றும் பிறந்த வீடு சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி இப்போது உங்களுக்கு தாய்மானாக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர் பெண்கள் வீட்டில் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியாக இது நடைபெறுவதாக சிறப்புரையாற்றினார்.இதைத் தொடர்ந்து பேசிய தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் போசும் போது கர்ப்பிணி பெண்கள் இதுபோன்ற சமயங்களில் மன அமைதியாகவும் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும் உங்களுக்கு உங்களுடைய மாமியார் கணவர்களால் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் அவர்களை காவல்துறை மூலம் சிறப்பாக கவனிக்கப்படும் என பேசினார்.இதைத்தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனை ஜமீன் கொல்லங்கொண்டான் உள்ள அரசு மருத்துமனையில் மாதந்தோறும் 270 குழந்தைகள் பிறப்பதாகவும் பெருமிதமாக தெரிவித்தார் ஆகையால் அனைவரும் அரசு மருத்துமனையில் பிரசவம் பார்க்க வேண்டும் .உங்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்படும் என தெரிவித்தார் மேலும் கொரோனா தடுப்பூசி விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். 10 லட்சம் மதிப்பில் ஆறு அங்கன்வாடி கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து 300க்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு போடப்பட்டு அறுசுவை விருந்தும் அளிக்கப்பட்டன..

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!