குழந்தைகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்:

மதுரை மாநகராட்சிகுழந்தைகளுக்கான நிமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி முகாமினை,மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாநகராட்;சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் துவக்கி வைத்து, பார்வையிட்டனர்.மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான நிமோகோக்கல் கான் ஜூகேட் தடுப்பூசி முகாமினை,மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்,ஆகியோர் தலைமையில் இன்று (23.07.2021) துவக்கி வைத்து பார்வையிட்டனர்.மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா நோயினை தடுப்பதற்காக நிமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி முகாம் இன்று குழந்தைகளுக்கு போடப்பட்டது.இந்த தடுப்பூசி, பிறந்த பச்சிளம் குழந்தை ஓன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பது மாதம் ஆகிய மாதங்களில் போடப்படுகிறது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து புதன் கிழமைகளிலும் தடுப்பூசி போடப்படும்.மேலும், அனைத்து மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.இந் நிகழ்ச்சியில், நகர்நல அலுவலர் மரு.குமரகுருபரன், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal