பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக மாயாகுளத்தில் RTE கல்வி உதவி மையம்…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக இன்று 23/07/2021 மாயாகுளம் கிளையில் RTE கட்டாயக் கல்வி உதவி மையம் நடைபெற்றது. இதில் ஊர் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

RTE தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் 2021- 2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 சட்டப்பிரிவு 12 (1) (சி) இன் கீழ் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கைக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். ஆகையால், தாங்கள் குழந்தைகளை LKG மற்றும் முதலாம் வகுப்பில் சேர்க்க உள்ளவர்கள் தேவையான ஆவணங்களை கொண்டு இணைய சேவை வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தனர்.

இது பற்றிய கூடுதல் விபரங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மாயாகுளம் கிளை. :97892 29411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal