Home செய்திகள் குப்பணம்பட்டியில் கடந்த 3 நாட்களில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பணம்பட்டியில் கடந்த 3 நாட்களில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது குப்பணம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் வைரமணி சொந்தமாக 50க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் தன்னுடைய ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துசென்று அவரது பட்டியில் நேற்று இரவு அடைத்துவிட்டு தூங்கசென்றார். ஆனால் காலையில் எழுந்த பார்த்தபோது அதில் 4ஆடுகள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனைதொடர்ந்து வைரமணி உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் ஆடுகள் திருட்டு குறித்து புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே கிராமத்தில் 5ஆடுகளும், கடந்த வாரம் 2 ஆடுகளும் திருடு போனதாக அந்த பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் அந்த கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் திருபோனதை கண்டு அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆடுகள் திருடுபோன சம்பவத்தினால் பல திருட்டுக்கள் நடைபெற வாய்ப்புள்ளததால் போலிசார் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரபடுத்த வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!