மேல்பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கண் சிகிச்சை முகாம் .

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல் பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் இரா.ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். முகாமில் கண் மருத்துவர் சங்கீதா, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்சீழ்வடிதல், கண் எரிச்சல் எரிச்சல் போன்ற பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனையும் வழங்கினார். முகாமில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு ,மகேஸ்வரி, ஆறுமுகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image