தளவாய்புரம் பகுதியில் காய்ச்சலுக்கு ஊசி போட சென்ற புது மாப்பிள்ளை உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் ஏகேஜி நகரில் வசித்து வரும் முனியசாமி என்பவரின் மகன் முகேஷ் (வயது 24) .இவருக்கும் இவரது தாய்மாமா மகள் பூபாலா -வுக்கும் திருமணம் முடிந்து ஒன்றரை மாதம் ஆகி உள்ளது. இந்நிலையில் இன்று காய்ச்சல் மற்றும் இருமல் தொந்தரவுடன் தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று உள்ளார். அங்கிருந்த மருந்துவர் எழுதி கொடுத்த மருந்தை செவிலியர் எடுத்து ஊசி போட்டுள்ளார். உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவர் வேறு ஊசி போட்டுள்ளார். உடனே உடல் சோர்வு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.இந்நிலையில் அங்கிருந்து உடனடியாக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சாதாரண காய்ச்சலால் உடல் நல குறைவுக்கு ஊசி போட சென்ற முகேஷ் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக கூறிய உறவினர்கள் சுகாதரா துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.மேலும் இந்த சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image