தமிழக முதல்வரின் திட்டமான மினி கிளினிக் – பால்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏழை ,எளிய பொது மக்கள் பயனடையும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த மினி கிளினிக் – னை பொது மக்கள் பயன்பாட்டிற்க்காக பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பால்வளத்துறை அமைச்சர்,கிருஷ்ணாபுரம் பகுதியானது மிகப்பெரிய மக்கள் தொகை அடங்கிய கிராமத்துக்கு இணையான பகுதியாகும். காய்ச்சல் தலைவலி என்றால் இங்கிருந்து தொலைவில் உள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு செல்லும் சூழ்நிலை இருந்து வந்தது. அதனை மாற்றி உங்கள் பகுதிக்கு கிளினிக் கொண்டு வந்துள்ளோம். இந்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகள், தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் தோட்டங்களில் வேலை பார்ப்பவர்கள் தான் இருக்கிறீர்கள். ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் நிகழ்ந்தால் சுக்கு, மிளகு காபி போட்டு சாப்பிட்டு இருந்து விடுவீர்கள். அது பலமான பாதுகாப்பான உணவு தான்.இருப்பினும் வைரஸ் காய்ச்சல் ஏதும் இருந்தால் பேருந்து பிடித்து மருத்துவமனை செல்ல வேண்டுமா இருந்து விடுவீர்கள். ஒரு நாள் காய்ச்சல் வந்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் வரை இருக்கும் என அதற்காக தனியார் மருத்துவமனை கட்டணம் அதிகமாக செலவாகும்.இந்த நிலைமை எல்லாம் மாற்ற தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு அற்புதமான திட்டத்தை உங்களுக்காக அர்ப்பணித்துள்ளார் இங்கு ஆப்ரேஷன் தவிர மற்ற எல்லா சிகிச்சைகளும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.மருத்துவர்கள் கிடைத்தவுடன் உங்களுக்கு எந்தெந்த பகுதியில் மினி கிளினிக் தேவைப்படுகிறதோ அனைத்து பகுதிகளிலும் ஒரு மாதத்தில் துவங்கப்படும் என பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply