
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பம் ஆகும் இதனை தொடர்ந்து பாலமேடு அலங்காநல்லூர் போன்ற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.தற்பொழுது அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனைகள் அவனியாபுரம் BMS துவக்கப்பள்ளியில் நடைபெறுகிறது இதில் கலந்து கொள்ள ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.அரசு விதிகளின்படி 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.ஆனால் பரிசோதனைக்கு 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்ஆனால் வருவாய்த்துறை சார்பில் 350 நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மாடுபிடி வீரர்களுக்கான பரிசோதனை நடைபெறுகிறது..சுகாதாரத் துறை சார்பில்மதுரை மாநகராட்சி மருத்துவ கண்காணிப்பாளர் இஸ்மாயில் பாத்திமா தலைமையில் 22 பேர் அடங்கிய தேர்வுக்குழுவினர் மாவீரர்களுக்கான ரத்த அழுத்தம், உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டது.பின்னர் அவர்களுக்கு போட்டோ ஒட்டிய அடையாள அட்டை மண்டல துணை தாசில்தார் செல்லப்பாண்டி வழங்கினார்இதில் 350 மாடுபிடி வீரர்களுக்கான டேங்கன் மட்டுமே வழங்கப்படுகிறது அரசு அறிவிப்பின்படி 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி மட்டுமே இருந்தாலும் மாடுபிடி வீரர்களுக்கு தேர்வில் தகுதி இழந்தவர்களுக்கான சூழல் வரும்போது அந்த 50 பேருக்கு வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்