
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் திமுக கிழக்கு, மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக ஊழியர்கள், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். அவை தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்ரமணியன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன், மாநில செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், மாவட்ட துணை செயலாளர் விஜயலட்சுமி முத்தையன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர், மூர்த்தி எம்.எல்.ஏ பேசியதாவது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மூடப்பட்டுள்ள அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும், இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வைகை அணை சாத்தியார் அணை குழாய் மூலம் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டு நீர்பிடிப்பு பகுதிகள் பாதுகாக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயர நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும், எனவே வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அதிமுக விற்கு தக்க பாடம் புகட்ட தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். மேலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மதுரை பிரச்சாரத்திற்கு வருகைதரும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்தும், சாத்தியார் அணையை அவர் பார்வையிடுவது குறித்தும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது….செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்