
டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், செங்கம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு, சென்னை – சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பெருமுட்டத்தில், விவசாய நிலங்களில் கறுப்பு கொடி ஏந்தி, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோன்று, டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, செங்கத்தில், மா.கம்யூ., வட்டார தலைவர் லட்சுமணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்