சொக்கநாதன்புத்தூர்சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் மற்றும் மேலூர் துரைச்சாமிபுரம் பகுதி விவசாயிகள் தேவிஆறுஆற்று பகுதியில் இருந்து வருகின்ற தண்ணீரை தடுப்பணை அமைத்து இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு கொண்டு சென்று அந்த நீர் மூலம் நிறைந்தால் மட்டுமே கண்ணிறைந்தாண் கண்மாய்,
களத்தூர் கண்மாய்,பூக்குடி கண்மாய் இது போன்ற பல்வேறு கண்மாய்கள் மூலம் இப்பகுதி விவசாயிகள் நெல் பயிர் செய்து வருகின்றனர்தற்போது பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது இந்த பகுதியில் சொக்கநாதன்புத்தூர் மற்றும் புத்தூர்,இனாம்கோவில்பட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது இதில் ஒரு பகுதியாக கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பகுதியில் மணல் மூட்டை அடிக்கு வைத்து தண்ணீர் திறந்து விடாமல் இருந்த நிலையில் தற்போது தண்ணீர் திறந்து விடுவதற்கு நீதிமன்ற உத்தரவை அளித்ததாக கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடாமல் தடுத்து தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்மேலும் பொதுப்பணித்துறை இஞ்ஜினியர் பத்மராஜ் , AE ஜான்சிராணி ஆகியோர் ஒருதலைபட்சமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறி அப்பகுதி விவசாயிகள் ஒன்று கூடி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்மேலும் தடுப்பணையை திறந்துவிட வந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரக் கூடிய இடத்தில் ஒரு பகுதியில் மூன்று அடி உயரத்திலும் மற்றொரு பகுதியில் இரண்டு அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டும் தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படாமல் வருகிறது அந்த குறையை சரி செய்ய வேண்டும் கோரிக்கை வைத்தும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்இந்த தகவல் அறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் ஸ்ரீதர் விவசாயிகளும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இருவருக்கும் தண்ணீர் பகுந்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த பின்பு விவசாயிகள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஒரு பதட்டமான சூழல் காணப்பட்டது…செய்தியாளர் வி காளமேகம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image