மதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல்

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் சிக்கல் நிறைந்த பத்திரங்களை பதிவு செய்து தருவதற்குலஞ்சங்கள் பெற்றுக்கொண்டு பதிவு செய்து கொடுப்பதாகவும்,சாதாரணமாக பத்திரங்கள் பதிவு செய்ய சார்பதிவாளர் லஞ்சம் பெற்றுக்கொண்டு பத்திரபதிவு நடைபெறுவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில்லஞ்ச ஒழிப்புத்துறைடிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாலை 6 மணியில் இருந்து சோதனை செய்தனர்.இதில் பதிவாளர் பாலமுருகன் அறையிலிருந்து கணக்கில் வராத இரண்டு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் புரோக்கர் செல்வகணி என்பவரிடமிருந்து எட்டாயிரம் ரூபாய் பறிமுதல் செய்த
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் சார்பதிவாளரிடம் விளக்க கடிதம் பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்த ஆண்டு மட்டும் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்