Home செய்திகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் மீண்டும் பணியமர்த்த பட்டதைக் கண்டித்து அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் இரண்டாவது நாளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் போராட்டம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் மீண்டும் பணியமர்த்த பட்டதைக் கண்டித்து அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் இரண்டாவது நாளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் போராட்டம்

by mohan

.மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கடந்த செப்,16 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் ரமேஷ் செப்,17 ஆம் தேதி அணைகரைப்பட்டி அருகேயுள்ள பெருமாள் குட்டம் மலை மீது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து,அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் , விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவலர்கள் மீது நடைவடிக்கை எடுக்க கோரியும், அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதையடுத்து மதுரை மாவட்டகாவல்கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து ராமேஷின் சடலம் அன்று மாலையே உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து ரமேஷ் சடலம் அனைக்கரைப்பட்டி மைதானத்தில் புதைக்கப்பட்டதை தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் ஜெயக்கண்ணன் , பரமசிவம் என்ற இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் ரமேஷ் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் சந்தோஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சார்பு- ஆய்வாளர்கள் திரும்பவும் பணிபுரிந்து வருகின்றனர்.எனவே சார்பு ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கம் கோரியும் , கைது செய்யக்கோரியும் அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் அணைக்கரைப்பட்டி மைதாளத்தில் ஒன்றிணைந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண்களில் கருப்புத்துணி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

ரமேஷின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் , இழப்பீடு தொகையையும் வழங்கக்கோரியவர்கள் காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.இந்த நிலையில் தற்போது வழக்கு நிலுவையில் உள்ள போதே சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டத்தை கண்டித்து மதுரை மாவட்டம் பேரையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அணைக்கரப்பட்டி கிராம் மக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தங்களது ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் இந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டு வருவதோடு தொடர்ந்து வருவாய்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.இரவு முழுவதும் விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தனர் இந்நிலையில் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் மேலும் இரவு முழுவதும் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து பரிமாறப்பட்டது பேச்சுவார்த்தையில்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக உறுதியுடன் தெரிவித்தனர்

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!