Home செய்திகள் பணிக்கொடை வழங்காத மின்வாரியம் .23 வருடங்களாக அலைக்கழிக்கப்படும் மின்வாரிய ஊழியர்

பணிக்கொடை வழங்காத மின்வாரியம் .23 வருடங்களாக அலைக்கழிக்கப்படும் மின்வாரிய ஊழியர்

by mohan

திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பஷீர் (வயது 69).இவருக்கு மனைவியும்இரு மகன்கள், மற்றும் அனிஸ் பீவி என்ற மகளும் உள்ளனர்.இவர் 1970 ஆம் ஆண்டு மின் வாரியத்தில் வேலைக்கு சேர்ந்தார். அரசரடியில் பணிபுரியும் போது 1998ஆம் ஆண்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பஷீர் மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஆகியவற்றில் வழக்கு தொடர்ந்து இவருக்கு பணிக்கொடை மற்றும் பணி கால பலன்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு 2004 ஆம் ஆண்டு உத்தா வி.ப்பட்டது .ஆனால் அதனை செயல்படுத்த மின்வாரியம் முன் வரவில்லை.

இதனைத்தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது அதற்கும் செவிசாய்க்காத மின்வாரியம் பஷீருக்கு வழங்கவேண்டிய எந்தவித பலன்களை வழங்காமல் இழுத்தடிக்கிறது. கடந்த 23 வருடங்களாக நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கிற்காக போராடி தளர்ந்து போன பஷீர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி போனார்.தற்போது வாடகை வீட்டில் குடியிருந்து வரும் பஷீர் வருமையில் வாடுகிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு இரண்டு மகன்கள் பஷிரை விட்டு போய் விட்டாலும் .மகள் மனைவி மட்டும் ஆறுதலாக இருந்து உதவி செய்து வருகிறார்கள்.வாடகை வீட்டில் குடியிருந்து வரும் பஷீர் தனது இறப்பிற்குள்ளாக பணம் கிடைட்கும் என்ற நம்பிக்கையில் வழக்கிற்காக கடன் வாங்கி மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால் அவருக்கு தேவையான பணிக்கொடை மற்றும் பணப்பலன்களை வழங்க முதல்வர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை விடுத்துள்ளார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!