Home செய்திகள் மண்டபம் அருகே வேதாளை, குஞ்சார்வலசை கிராமங்களில் காமராஜர் நினைவு நாளில் மாணவர்களுக்கு உதவிக்கரம்

மண்டபம் அருகே வேதாளை, குஞ்சார்வலசை கிராமங்களில் காமராஜர் நினைவு நாளில் மாணவர்களுக்கு உதவிக்கரம்

by mohan

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளையில் காமராஜரின் 46வது ஆண்டு நினைவு தினம் காமராஜர் அறக்கட்டளை, பனங்காட்டு மக்கள் கழகம், பனங்காட்டு படை கட்சி சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. காமராஜர் அறக்கட்டளை தலைவர் என் பஞ்சவர்ணம், செயலர் டி.ராமநாதன், முன்னாள் செயலர் சு.முருகேசன் பனங்காட்டு மக்கள் கழக மாநில தலைவர் கே.சி.ரஜி சேதுபதி நிர்வாகிகள் பி.காமராஜ், எம்.பொன்ராஜ், பி.புல்லாணிகுமார், கே பாண்டி, பனங்காட்டு படை கட்சி நிர்வாகிகள் எம்.தினேஷ், நிரஞ்சன் உள்பட பலர் பங்கேற்றனர். மாணாக்கருக்கு கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை அருகே குஞ்சார் வலசையில் கர்மவீரர் காமராஜர் உதவும் கரங்கள், தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை, குஞ்சார் வலசை நாடார் உறவின் முறை, கிராம பொது மக்கள் மற்றும் மலேசியா வாழ் குஞ்சார்வலசை நண்பர்கள் சார்பில் காமராஜர் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. காமராஜர் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, ஆதரவற்ற பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குஞ்சார்வலசை நாடார் உறவின் முறை தலைவர் வி.மாரி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் எஸ்.எம்.பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார். வேதாளை ஊராட்சி முன்னாள் துணை தலைவர் எஸ்.அசுபதி, வார்டு உறுப்பினர் கள் எஸ்.ஜெயபிரகாஷ், சி.கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!