உசிலம்பட்டியில் கீழே கிடந்த ரூ40,000 மதிப்புள்ள செல்போனை எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த பெட்டிக்கடைக்காரருக்கு குவியும் வாழ்த்துகள்..

செட்டியபட்டியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகே உள்ள அரசு அலுவலகத்திற்கு சென்று திரும்பிய போது எதிர்பாராதவிதமாக தனது செல்போனை தவறவிட்டு சென்ற இடமெல்லாம் சென்று தேடி அலைந்துள்ளார். உசிலம்பட்டி முருகன் கோவில் அருகே பெட்டிக்கடை வைத்துள்ள உசிலம்பட்டியே சேர்ந்த முருகன் என்பவர் தனது கடை வாசலில் கிடந்த செல்போனை எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எண்ணி செல்போனை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று Call Historyல் இருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தொலைத்த செல்போன் கடையில் பத்திரமாக இருப்பதாகவும் கடை இரவு-9-மணிவரை இருக்கும் என்றும் பதட்டப்படாமல் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறியது.செல்போனை தொலைத்த விக்னேஷ் குடும்பத்தினரிடையும் நண்பர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியது.கடைக்காரர் முருகனின் செயலுக்கு தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image