ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட
ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் 2020ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:இந்திய தேசம் சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 15-ஆம் நாளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆண்டுதோறும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுதந்திர தின விழாவின் போது கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல், கைகளை சுத்தமாகக் கழுவி பராமரித்திட போதிய அளவு சானிடைசர், சோப்பு இருப்பு வைத்தல் போன்ற நடைமுறைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும். குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கலைநிகழ்ச்சிகளை தவிர்ப்பது நலம். சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை அவர்களது வீடுகளுக்கே நேரடியாகச் சென்று கௌரவித்திட வேண்டும். மேலும், விழா மைதானத்தில் அவசர சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக மருத்துவக்குழு மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் குழு தயார் நிலையில் இருந்திட வேண்டும். குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.சிவகாமி, இராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் து.தங்கவேலு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜி.கோபு, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.எம்.அல்லி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அ.புகழேந்தி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image