திமுக ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் திமுக தகவல் தொடர்பு அணி சார்பில் செம்பை வடக்கு, தெற்கு  பொறுப்பாளர்கள் ஆலோசனை  கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம். நிவேதா முருகன் கலந்துகொண்டு திமுக சாதனைகளை பொதுமக்களுக்கு முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும், மேலும் கரோனா பொது முடக்கத்தா சிரமப்படும் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், அப்துல்மாலிக், பூம்புகார் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், நாகை வடக்கு மாவட்ட தகவல் தொடர்பு அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர்  தகவல் தொடர்பு அணி சேர்ந்த ஊராட்சி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தெற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

இரா. யோகுதாஸ்,
மயிலாடுதுறை  செய்தியாளர்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image