தி.மலை மாவட்ட எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள், தி.மலை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு.

தி.மலை மாவட்டம் செங்கத்தில் எட்டு வழி சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தியதில் அதிகளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 மாவட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ,காஞ்சிபுரம் விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்தியதில் அனைத்து விவசாயிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்திவருகின்றனர் .தற்போது உச்சநீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலை வழக்கு மேல்முறையீடு நடைபெற்றுவரும் நிலையில் எதிர்ப்பு இயக்க விவசாயிகள், தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை அவர்களை சந்தித்து செங்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.செங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி முன்னிலை வகித்தார். மத்திய மாநில அரசுகள் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் ,5 மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு வழிச்சாலை கைவிடக்கோரி எதிர்ப்பு தெரிவித்து கூட்டாக வெளியிடவேண்டும் என்றும், வரும் ஆகஸ்ட் 15ல் கிராம சபாவில் எட்டு வழிசாலை குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ,என்று அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.எட்டு வழிச்சாலையால் பாதிக்கும் ஐந்து மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து எட்டு வழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று 8வழிச்சாலை எதிர்ப்பு இயக்க நிர்வாகிகள் கோரிக்கை மனு மனுவில் கூறப்பட்டுள்ளது.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal