பிளல் 2 தேர்வு முடிவுகள் ராமநாதபுரம் மாணவ, மாணவிகள் 13,065 பேர் தேர்ச்சி

ராமநாதபுரம் -கடந்த 2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ல் தொடங்கி மார்ச் 24 வரை நடைபெற்து. மார்ச் 24ஆம் தேதி தேர்வை தவற விட்ட மாணாக்கருக்கு ஜூலை 27 ஆம் தேதி மறு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகள் ஏப்.24 ல் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கொரானா பரவலால் தேர்வு முடிவுகள் தள்ளிப்போனது. ஜூலை முதல் வாரம் முடிவுகள் வெளியாகலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (16.7.2020) காலை திடீரென வெளியானது. இத்தேர்வை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6,525 மாணவர்கள், 7,506 மாணவிகள் என 14 ஆயிரத்து 31 பேர் எழுதினர். இதில் 5,916 மாணவர்கள், 7,149 மாணவியர் என 13 ஆயிரத்து 65 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் 90.67 சதவீதமும், மாணவியர் 95.24 சதவீதமும் தேர்ச்சி அடைந்தனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 93.12 ஆகும். 69 அரசு பள்ளிகளில் தேர்வெழுதிய 4,851 மாணாக்கரில் 4,299 பேர் தேர்ச்சி அடைந்தனர். இத்தேர்வை எழுதிய பார்வையற்ற இருவர், காது கேளாத, பேச இயலாத 4 பேரில் 3 பேர், மாற்றுத்திறனாளிகள் 17 பேரில் 14 பேர், இதர குறைபாடு உடைய 7 பேரில் 6 பேர் தேர்ச்சி அடைந்தனர். கடந்த 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டில் 92.30 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 16 ஆவது இடம் பிடித்தது. 2019-2020 கல்வி ஆண்டில் 18 ஆவது இடத்தை பிடித்தது.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image