சேரன்மகாதேவி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்-முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தொழில் வர்த்தக சங்கம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளர் வள்ளிநாயகம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேரன்மகாதேவி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கும் ஆட்டோ மூலம் கரோனா தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.மேலும் திங்கள் கிழமை முதல் சேரன்மகாதேவியில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதில் சேரன்மகாதேவி தொழில் வர்த்தக சங்கச் செயலர் அன்வர் உசேன், துணைச் செயலர் சாமுவேல் செல்வின், தமிழ் பேரவைச் செயலர் பாலசுப்பிரமணியன், மார்ட்டின், ஜெயகுமார், வழக்குரைஞர்கள் மணிகண்டன், இசக்கிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேரன்மகாதேவி தொழில் வர்த்தக சங்க செயற்குழு உறுப்பினர் மோனிகா ரவிசங்கர் செய்திருந்தார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image