Home செய்திகள்உலக செய்திகள் லேசர் கண்டுபிடித்து முதலில் செய்து காட்டிய, நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்ட அமெரிக்க இயற்பியலாளர் தியோடோர் ஆரோல்டு மைமான் பிறந்த தினம் இன்று (ஜூலை 11, 1927).

லேசர் கண்டுபிடித்து முதலில் செய்து காட்டிய, நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்ட அமெரிக்க இயற்பியலாளர் தியோடோர் ஆரோல்டு மைமான் பிறந்த தினம் இன்று (ஜூலை 11, 1927).

by mohan

தியோடோர் ஆரோல்டு “டெட்” மைமான் (Theodore Harold “Ted” Maiman) ஜூலை 11, 1927ல் லாஸ் ஏஞ்சலிசில் பிறந்தார். தன் பள்ளி நாட்களில் மின் கருவிகளையும் வானொலி வாங்கிகளை செப்பனிட்டும் பணம் ஈட்டி அதைப் பயன்படுத்தி கொலராடோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் இயற்பியல் துறையில் இளங்கலை (B.S.) படிப்பைத் துவங்கினார். 1949ல் பட்டம் பெற்ற பின், மேற்படிப்புக்காக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மின்னியல் துறையில் முதுநிலை பட்டத்தை 1951 இலும், முனைவர் ஆராய்ச்சிப் பட்டத்தை 1955 இலும் பெற்றார். அவருடைய முனைவர் ஆய்வுப் பட்டப்படிப்பு, செய்முறை இயற்பியலில், வில்லிசு லாம்பு (Willis Lamb) வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது. தன் முனைவர் பட்டப் படிப்பில் ஆற்றலால் தூண்டப்பட்ட ஹீலியம் அணுக்களின் எதிர்மின்னிகளின் நுட்ப ஆற்றல் நிலை மாற்றங்களை (fine structure) நுண்ணலை-ஒளியலை அளவீடுகள் மூலம் ஆய்வு செய்தார்.

மைமானின் சீரொளிக் கருவியை முனைவர் ரால்ஃவ் எல். அட்சின்சன் (Dr. Ralph L. Hutcheson) வளர்த்துத் தந்த சிகப்புக்கல் அல்லது கெம்பு என்னும் படிகத்தைக் கொண்டு உருவாக்கி மே 16, 1960ல் வெற்றிகரமாக இயக்கிப் புதுமை படைத்தார். அப்பொழுது இவர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள மாலிபு என்னும் இடத்தில் உள்ள ஹியூஸ் ஆய்வகத்தில் செய்தார். சீரொளியை யார் கண்டுபிடித்தார்கள் என்பதில் கார்டன் கூல்டு (Gordon Gould ) பல வழக்குகள் ஏற்பட்டு, கடைசியில் கார்டன் கூல்டு என்பார்தான் முதலில் வகுத்து (design) கண்டுபிடித்தார் என்றுகூறி அவருடைய காப்புரிமங்களுக்கே முன்னுரிமைகள் அளிக்கப்பட்டன. ஆனால் மைமானுடைய காப்புரிமம் மற்ரும் அவருடைய ஆய்வின் பயனாகவும் அவர்தான் முதன்முதலில் சீரொளியை செய்து காட்டினார் என்பதில் எந்த கேள்விக்கும் இடமில்லாமல் முடிவாகியது.

ஹியூஸ் ஆய்வகத்தை விட்டுச் சென்றபின் குவாண்ட்ரான் என்னும் நிறுவனத்தில் சேர்ந்து அங்கு லேசர் மேம்பாட்டுப்பணிகளைச் செய்து வந்தார். 1962ல் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு முழுச்சொந்தமான, புதிதாக நிறுவப்பட்ட, கோராட் கார்ப்பொரேசனின் (Korad Corporation) தலைவராக (president) பொறுப்பேற்றார். பின்னர் 1968ல் மைமான் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இவருடைய லேசர் கண்டுபிடிப்புக்காக இருமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டார் எனினும் இவர் அப்பரிசைப் பெறவில்லை. அமெரிக்காவின் தேசிய .அறிவியல் உயர்கல்விக்கழகம், தேசிய பொறியியல் உயர்கல்விக்கழகம் (National Academies of Science and Engineering) ஆகிய இரண்டிலும் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார் .

1966ல் ஆலிவர் இ. பக்லி பரிசும் (Oliver E. Buckley Prize) 1983/84 இல் வுல்ஃவ் பரிசும், 1987 இல் ஜப்பான் பரிசும் பெற்றார். பல பல்கலைக்கழகங்கள் கௌரவ (பெருமை) முனைவர் பட்டம் அளித்துப் பெருமைப் படுத்தின. அவற்றுள் கடைசியாக 2002ல் கனடாவில் வான்கூவரில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைக்கழம் பெருமை முனைவர் பட்டம் அளித்தது. சீரொளி (லேசர்) யைக் கண்டுபிடித்து முதலில் செய்து காட்டிய தியோடோர் ஆரோல்டு மைமான் மே 5, 2007ல் தனது 79வது வயதில் கனடாவில் உள்ள வான்கூவரில் சிஸ்டெமிக் மாஸ்டோசைட்டோசிஸ் நிலையால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!