தென்காசி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் முக கவசங்கள் விற்பனை-மாவட்ட ஆட்சியர் தகவல்..

ரேஷன் கடைகளில் ரூ.60க்கு 5 முககவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தென்காசி மாவட்டத்தில் கொரொனா நொய் தொற்று தடுப்பு நடவடிக்கை பல துறைகள் மூலம் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக கூட்டுறவுத் துறையும், மகளிர் திட்ட முகமையும் இணைந்து சங்கரன்கோவில் கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ஆலங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தி வரும் கூட்டுறவு மருந்து கடைகள், தென்காசி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் தென்காசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைசங்கம் நடத்தி வரும் நியாயவிலைக் கடைகள் மூலமும் மறுபடியும் 5 முக கவசங்கள்அடங்கிய தொகுப்பு ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.மேற்படி இரண்டு அடுக்கு முகக் கவசங்கள் மகளிர் திட்ட முகமைதிருநெல்வேலி அலுவலகத்தின் கீழ் உள்ள சுய உதவிக்குழுக்கள் மூலமாக உயர் தரத்தில் சிறந்த முறையில் தயார் செய்யப்பட்டு, கூட்டுறவு துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் பொது மக்களுக்கு தேவையான சானிடைசர்களும் கூட்டுறவு மருந்து கடைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை பொது மக்கள் வாங்கி பயனடைய தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image