போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக சபதம் எடுப்போம்-இசைப்புயல் ஏர்.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ..

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக சிறந்து விளங்குபவர் ஏ.ஆர்.ரகுமான். பல்வேறு மொழிகளில் பரபரப்பான பாடல்கள் மற்றும் சார்ட்பஸ்டர் ஆல்பங்களுக்காக புகழ்பெற்றவர். இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஒரே சமயத்தில் வாங்கி, இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரகுமான்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், (ஜூன்.26) போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத சிறுவர் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை (International day against drug abuse and illicit child trafficking) முன்னிட்டு போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்த பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வீடியோ செய்தி ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். அதில் “போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல்-இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இன்றைய நிலையில், நாம் எல்லோருக்கும் விழிப்புணர்வு அவசியம். இந்த COVID-19 வைரஸ் தாக்குதலில் இருந்து விரைவில் மீண்டுவிடலாம். ஆனால், போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிட்டால் மீள்வது சிரமம். போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை. தீய எண்ணங்களையும் கெட்ட நடத்திகளையும் உருவாக்கும், பலரின் வாழ்க்கை அழிந்துபோகும். கொடூர குற்றங்கள், வன்கொடுமை, சிறுவர்களின் வாழ்க்கை சீரழிவு போன்ற பல்வேறு தீய செயல்கள் போதைப்பொருளின் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள். எனவே போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்போம். இளைய தலைமுறையை காப்பாற்றுவோம் என ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

செய்தித்தொகுப்பு
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply